உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவு சார் மையத்தில் 16ம் தேதி மாதிரி தேர்வு

அறிவு சார் மையத்தில் 16ம் தேதி மாதிரி தேர்வு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், அரசு போட்டி தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகள், வருகிற,16ம் தேதி நடைபெற உள்ளன. மேட்டுப்பாளையம் மணி நகரில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே, நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய அரசு துறைகள் நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, சிறந்த ஆசிரியர்களை கொண்டு, இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குப்புராஜ், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.மேலும் இவர் போட்டித் தேர்வுக்கு மிகவும் பயனளிக்க கூடிய, தமிழ்நாடு வரலாறும் பண்பாடும், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழ் மொழி வரலாறு உட்பட, 15 புத்தகத் தொகுதிகளை மாணவர்கள் பயன்பாட்டிற்காக, நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். நகராட்சி கமிஷனர் அமுதா பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜா மணி, நூலகர் பவித்ரா, நகராட்சி அலுவலர் ஜெயராமன், உதவியாளர்கள் மாரிமுத்து, பிரபு மற்றும் மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் வருகிற 16-ம்தேதி திங்கட்கிழமை காலை, 10:30 மணிக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 4 பணியிடங்களுக்கான மாதிரி தேர்வுகள், இந்த நூலகத்தில் நடைபெற உள்ளது.மாதிரி தேர்வில் பங்கு பெறவும், பயிற்சி வகுப்புகளில் பங்கு பெறவும் ஆர்வம் உள்ள மாணவர்கள் 90804 82073 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை நகராட்சி கமிஷனர் அமுதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ