உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்

எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்

கோவை; எஸ்.எஸ்.வி.எம்., ஸ்கூல் ஆப் எக்ஸ்சலன்ஸ் பள்ளியில், இளைஞர்களுக்கான மாதிரி நாடாளுமன்றத் திட்டம் துவங்கப்பட்டது.எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, அறங்காவலர் மோகன்தாஸ் தலைமை வகித்தனர். திட்டத்தை துவக்கி வைத்து, கோவை எம்.பி.,ராஜ்குமார் பேசுகையில், ''வாக்களிக்கும் கடமையுடன் மாணவர்கள் நின்றுவிடாமல், ஆட்சி, கொள்கை உருவாக்கம் மற்றும் பொது சேவையிலும் நேரடியாக பங்கேற்க வேண்டும்,'' என்றார்.யங் இந்தியன்ஸ் கோவை கிளையின், தளிர் பிரிவு ஏற்பாடு செய்த நாடாளுமன்ற மாதிரி நிகழ்வில், கோவையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட, பள்ளிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு, அரசியல் கட்சிகளை உருவாக்குதல், தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துதல், மசோதாக்களை தயார் செய்தல், கொள்கைகள் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட செயல்முறைகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை