உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பி.என்.புதுாரில் மோடி முகாம்; தையல் மெஷின் வினியோகம்

 பி.என்.புதுாரில் மோடி முகாம்; தையல் மெஷின் வினியோகம்

கோவை: பி.என்.புதுாரில் பா.ஜ., சார்பில் நேற்று 'மோடி முகாம்' நடந்தது. பங்கேற்ற பெண்களுக்கு 20 தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. பி.என்.புதுார் மணிப்பிரியா திருமண மண்டபத்தில் முகாம் நடந்தது. பா.ஜ., மாநில செயலாளர் மலர் கொடி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.முகாமின் ஒரு பகுதியாக, கோவை மக்கள் சேவை மையம் சார்பில், பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் தையல் பயிற்சி பெற்ற 20 பயனாளிகளுக்கு, இலவச தையல் இயந்திரங்களை மாநில செயலாளர் மலர்கொடி வழங்கினார். பொது மருத்துவம், கண் பரிசோதனை, மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய உதவிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களை பதிவு செய்தல் போன்ற பல்வேறு திட்டங்கள், தொகுதி மக்களுக்கு இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது.ஏராளமானோர் பங்கேற்றனர். சாலையோரம் பூமாலை தொடுக்கும் மகளிருக்கு வெயிலிலிருந்து பாதுகாக்க குடை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை