உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு அரிசிக்கடைகளில் பணம், டி.வி.ஆர். திருட்டு

இரு அரிசிக்கடைகளில் பணம், டி.வி.ஆர். திருட்டு

கோவை; கணபதி நல்லாம்பாளை யம் ரோட்டை சேர்ந்தவர் தீபா, 45; ரத்தினபுரி சங்கனுார் பிரதான ரோட்டில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 10ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த ரூ.4,000 மற்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் டி.வி.ஆர்., மாயமாகி இருந்தன. இதேபோல், கோவை தயிர் இட்டேரி ரோட்டில், சங்கனுாரை சேர்ந்த விக்னேஷ், 37 என்பவரின் அரிசி கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இ ருந்த பணம், டி.வி.ஆர்., ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. தீபா மற்றும் விக்னேஷ் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !