குருந்தமலையில் குரங்குகள் பிடிப்பு
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், குரங்குகள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பக்தர்கள் கொண்டு வரும் பழங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றை வாகனங்களில் இருந்து எடுத்துச்செல்வதும், கோவில் வளாகத்தில் சுற்றி திரிவதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது. இதையடுத்து, காரமடை வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க நேற்று முன் தினம் குருந்தமலை கோவில் அருகே கூண்டு வைத்தனர். இதில் நேற்று 3 குரங்குகள் சிக்கி கொண்டன. இந்த குரங்குகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.--