உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருவமழை தீவிரம் நீர்வரத்து அதிகரிப்பு

பருவமழை தீவிரம் நீர்வரத்து அதிகரிப்பு

வால்பாறை, ; தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மேல்நீராறில், 47 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.வால்பாறையில் கடந்த வாரம் முதல் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்கிறது. தொடர்ந்து பெய்யும் மழையினால், சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, நடுமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்யும் பருவமழையினால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐந்து மாத இடைவெளிக்கு பின் பருவமழை துவங்கியுள்ள நிலையில், குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 20, வால்பாறை - 27, பரம்பிக்குளம் - 8, மேல்நீராறு - 47, கீழ்நீராறு - 13, காடம்பாறை - 5, மேல்ஆழியாறு - 3, சர்க்கார்பதி - 44, துாணக்கடவு - 2, பெருவாரிப்பள்ளம் - 3 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை