உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்டும் வலுக்கிறது பருவமழை; நீர்நிலைகளில் வரத்து அதிகரிப்பு

மீண்டும் வலுக்கிறது பருவமழை; நீர்நிலைகளில் வரத்து அதிகரிப்பு

வால்பாறை; வால்பாறையில், மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் இந்த ஆண்டு மே மாதம் இறுதியில், தென்மேற்கு பருவமழை துவங்கியது. கடந்த வாரம் பெய்த கனமழையால் வால்பாறையில் உள்ள பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.சோலையாறு அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான மேல்நீராறு அணை நிரம்பியது. இதே போல் வால்பாறை நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணையும் நிரம்பியது.இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக மழைப்பொழிவு குறைந்து சாரல்மழை மட்டுமே பெய்து வந்தது. நேற்று முன்தினம் முதல் பருவமழை மீண்டும் பரவலாக பெய்யத்துவங்கி உள்ளது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில், தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவீரமடைந்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 95.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 564 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 890 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 42, பரம்பிக்குளம் - 19, வால்பாறை - 53, மேல்நீராறு - 79,கீழ்நீராறு - 62, பெருவாரிப்பள்ளம் - 2 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி