பருவ மழை துவங்கி விட்டது; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
கோவை : வடகிழக்குப் பருவமழை துவங்கி விட்டது. பயிர்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:n வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி, மஞ்சள் போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய காலத்தில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்ய வேண்டும்.n வயல்களில் அதிக நீர் தேங்காமல், வடிகால் வசதி செய்ய வேண்டும். மழை நேரத்தில் நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க, எதிர்த்திசையில் முட்டுக்கொடுத்து, புதி தாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்கவும்.n வயல்களில் போதிய பயிர்ப்பாதுகாப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். மரங்கள், கொடிகளில் அடிப்பகுதியில் மண் அணைக்க வேண்டும்.n காய்ந்துபோன இலை, பட்டுப்போன கிளைகளை அகற்றி, நிழலினை ஒழுங்குபடுத்த வேண்டும். பசுமைக் குடில் மற்றும் நிழல்வலைக் குடில் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன், கம்பிகளால் இணைக்கவும். அருகில் மரங்கள் இருப்பின், கவாத்து செய்யவும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கவனிப்பு
'வாழை மரத்துக்கு மண் அணைக்க வேண்டும். சவுக்கு, யூகலிப்டஸ் கம்புகளைக் கொண்டு முட்டுக்கொடுக்க வேண்டும். நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கும் மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்' என கூறியுள்ளார் சித்தார்த்தன்.