உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருவமழை முன்னெச்சரிக்கை  தீயணைப்பு செயல்விளக்கம்

பருவமழை முன்னெச்சரிக்கை  தீயணைப்பு செயல்விளக்கம்

வால்பாறை: வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கவுள்ள நிலையில், மழை கால முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினர்  பொதுமக்களுக்கு செயல்விளக்கம் காண்பித்தனர். வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மழை காலத்தில் ஆற்றோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவது என்பது குறித்தும், ஆறு மற்றும் அருவிகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது, மழை காலங்களில் ஏற்படும் மண் சரிவின் போது பாதுகாத்துக்கொள்வது குறித்தும் செயல்விளக்கம் காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி