மேலும் செய்திகள்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா குருபூஜை
6 minutes ago
நீலம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
7 minutes ago
அன்னூர்: அன்னூர், சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. இங்கு லைசென்ஸ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் கூறுகையில், '50 வயது நிறைவடைந்த உடன் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து வாகனத்தை ஓட்டி காண்பித்து வந்து, இரண்டு மாதங்களுக்கு மேலானாலும் டிரைவிங் லைசென்ஸ் கிடைப்பதில்லை. பலர் மூன்று மாதங்கள் ஆகியும் கிடைக்காமல் உள்ளனர். இதனால் வேலைக்கு விண்ணப்பித்தல் மற்றும் வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விசாரித்தால், டிரைவிங் லைசென்ஸ் கார்டு பற்றாக்குறையாக உள்ளது. வந்தவுடன் அனுப்பி வைக்கிறோம் என்று கூறுகின்றனர். கடந்த ஆறு மாதமாக இந்த நிலை நீடிக்கிறது. அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்தவர்களுக்கு, 15 நாட்களுக்குள் டிரைவிங் லைசன்ஸ் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
6 minutes ago
7 minutes ago