மேலும் செய்திகள்
சாலை விபத்துகளில் புதுச்சேரி புது உச்சம்
05-Jan-2025
கோவை; கடந்த ஒரு ஆண்டில் நடந்த, 1500க்கும் மேற்பட்ட தீ விபத்துக்களில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் தெற்கு, வடக்கு, பீளமேடு, கோவைப்புதூர், கணபதி; புறநகரில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட, 13 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் உள்ளன. 24 மணி நேரமும் தீயணைப்புத்துறை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் உள்ள, 13 தீயணைப்பு நிலையங்களுக்கு விபத்து தொடர்பாக, கடந்த 2024ம் ஆண்டு மொத்தம், 1594 அழைப்புகள் வந்துள்ளன. அழைப்புகளின் அடிப்படையில், தீ விபத்துகளை சிறிய, நடுத்தர, பெரிய விபத்துகள் என பிரிக்கின்றனர். லட்சம் ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்படும் விபத்துகள் மற்றும் மனித உயிரிழப்பு ஏற்படும் விபத்துகள், தீவிர தீவிபத்துகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.இதேபோல், மனிதர்கள், கால்நடைகள், பாம்புகள் மீட்பு தொடர்பாக, 5,598 அழைப்புகள் வந்துள்ளன. இதில் பாம்பு மீட்பு அழைப்புகள் அதிகம்.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் புளுகாண்டி கூறுகையில், ''மாவட்டத்தில் ஏற்படும் தீ விபத்துகளில், மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் 270 வீரர்கள் உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபடுகின்றோம். ஆயிரக்கணக்கான விபத்துகள் ஏற்படுகின்றன.அதில் குப்பை கிடங்கில் ஏற்படும் விபத்துகள் மிகவும் சவாலானது. குப்பை என்பதால், தீ எளிதில் பரவி விடுகிறது. தீயணைப்பு வாகனங்கள் சென்று வர, இடவசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுவது சவாலானதாக அமைகிறது,'' என்றார்.ஆயிரக்கணக்கான விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் குப்பை கிடங்கில் ஏற்படும் விபத்துகள் மிகவும் சவாலானது. குப்பை என்பதால், தீ எளிதில் பரவி விடுகிறது. தீயணைப்பு வாகனங்கள் சென்று வர, இடவசதி இல்லாமல் இருக்கிறது.
05-Jan-2025