உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு குழந்தைகளை சித்ரவதை செய்த தாய், தோழி கைது

இரு குழந்தைகளை சித்ரவதை செய்த தாய், தோழி கைது

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே தோழியுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்ததாக கூறி, இரண்டு ஆண் குழந்தைகளை, பெற்ற தாய் மற்றும் அவரது தோழி தாக்கி சித்ரவதை செய்தனர். குழந்தைகள் மீட்கப்பட்டு, தாய் மற்றும் தோழியை காரமடை போலீசார் கைது செய்தனர்.காரமடை அருகே தோலம்பாளையம் பகுதி 5 ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் அதே பகுதியை சேர்ந்த பிரிங்கா, 28, மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சு, 25, ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர். இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக கூலி வேலை பார்க்கின்றனர். இதில் மஞ்சு என்பவருக்கு திருமணம் ஆகி 10 வயதுக்குட்பட்டு, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மஞ்சுவின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் வீட்டு சென்ற நிலையில், மஞ்சு தனது இரு குழந்தைகளுடன் தோழி பிரியங்காவுடன் கடந்த 6 மாத காலமாக அந்த வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இதனிடையே பிரியங்காவும், மஞ்சுவும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், மஞ்சுவின் குழந்தைகள் அவர்களது இந்த வாழ்வுக்கு இடையூறாக இருந்ததாக கூறி, அவர்களை தினமும் மஞ்சு மற்றும் பிரியங்கா ஆகியோர், அடித்து, துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளனர் குழந்தைகளின் அலறல் சத்தம் அடிக்கடி கேட்கவே, அப்பகுதி பொதுமக்கள் சைல்டு ஹெல்ப் லைனுக்கு போன் செய்து புகார் செய்துள்ளனர். இரண்டு ஆண் குழந்தைகளையும் மீட்டனர்.குழந்தைகளை தாக்கிய தாய் மஞ்சு மற்றும் அவரது தோழி பிரியங்கா மீது காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் பிரியங்கா மற்றும் மஞ்சுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி