சாலையோரம் மண்; அபராதம் விதிக்க உத்தரவு
கோவை; மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, காளப்பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேற்று ஆய்வு செய்தார். அலுவலக வளாகத்தில் இருந்த குப்பை, தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவிட்டார். விளாங்குறிச்சி-சரவணம்பட்டி பிரிவில் உள்ள ரவுண்டானா அருகே சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியலை, அகற்ற உத்தரவிட்டார். லட்சுமி நகரில் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, கட்டுமான பொருட்களை அகற்றவும், பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.