சேறும் சகதியுமான ரோடு வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
நெகமம்: பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோடு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.இங்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையால் ரோடு பணிக்காக எடுக்கப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கியும், சில இடத்தில் சேறும் சகதியுமாக மாறி குழி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் இப்பகுதியை கடக்க சிரமப்படுகின்றனர்.மேலும், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், ரோடு மற்றும் குழிக்கு வித்தியாசம் தெரியாமல் தடுமாறி விழுகின்றனர்.எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோடு விரிவாக்கம் செய்யும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.