உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

நெகமம்; நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், நெகமம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வரும், 6ம் தேதி பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இதில், நீரிழிவு, ரத்த அழுத்தம், தோல் நோய், எலும்பு மூட்டு சிகிச்சை, மனநலம், கண் மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் மகளிர் நல மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இலவச ரத்தம், சளி மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது. சிகிச்சைக்கு வருவோர், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல்போன் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை