உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதிகள் கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் மா.கம்யூ., கட்சி சார்பில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்த வேண்டும். பழுதடைந்த சாக்கடைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். மேட்டுப்பாளையம் ரோட்டையும், ஐடல் நாயுடு வீதியையும் இணைக்கும் பழுதடைந்த தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக அமைத்து தர வேண்டும். மெயின் ரோடுகளில் தேக்கி வைக்கும் குப்பைகளை சேகரிக்கும்போது, வண்டிகளின் மூலமாக நகருக்கு வெளியே கடத்தி, நவீன முறைகளில், அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள உயர் மட்ட மேம்பாலத்தை சீர்படுத்தி, சர்வீஸ் ரோடுகளை விரிவாக்கி, பொது போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்.மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும். சாலையோர வியாபார வளாகங்களை உருவாக்கி, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். பெரியநாயக்கன்பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கோகுல கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கவுன்சிலர் சிவராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் கருப்புசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை