உள்ளூர் செய்திகள்

நகராட்சி அதிரடி!

 சரக்கு வாகனத்தில் பதுக்கி கொண்டு வந்த 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்பொள்ளாச்சி ;பொள்ளாச்சி நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மக்களிடையே அதிக புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி வந்த வாகனங்களில் கொண்டு வரப்பட்ட, 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு குறையாமல் உள்ளது.இந்நிலையில்,நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்களை திறந்தவெளியிலும், சாக்கடையிலும் வீசுவதால், கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவு தேங்குவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.மழை காலத்தில், சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் கவர் அடைத்துக் கொள்வதால், மழைநீரும், கழிவுநீரும், ரோட்டில் தேங்குகிறது.இந்நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாகனங்களில் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று டி.கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவில் அருகே சுகாதார அலுவலர் சுந்தர்ராஜன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அவ்வழியாக சரக்கு ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்ட போது, பொருட்களோடு பொருட்களாக, பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்துக்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, பிளாஸ்டிக் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.இதை, நகராட்சி கமிஷனர் கணேசன், நகர் நல அலுவலர் டாக்டர் தாமரைக்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின், அந்த வாகனத்துக்கு, 20 ஆயிரம் ரூபாய் நகராட்சி கமிஷனர் அபராதம் விதித்தார்.நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக வாகனங்களை சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டன.டி.கோட்டாம்பட்டி அருகே கோவையில் இருந்து மளிகை பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் இருந்த, ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. நகரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை