உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முருக பக்தர்கள் மாநாடு; 400 பேர் பங்கேற்க முடிவு

முருக பக்தர்கள் மாநாடு; 400 பேர் பங்கேற்க முடிவு

அன்னுார்; இந்து முன்னணியின் அன்னுார் ஒன்றிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். நகர பொதுச்செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகிற 22ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில், இந்து முன்னணி மாநில நிர்வாகிகள், பல்வேறு இந்து அமைப்பினர், மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். இதை முன்னிட்டு, ஆறுபடை வீடு கண்காட்சி நடைபெறுகிறது. மாநாட்டில் அன்னுார் ஒன்றியத்திலிருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. குப்பனுார் ஊராட்சி பகுதியில், விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மண் திருட்டு நடப்பதை கண்டித்து, வருகிற 30ம் தேதி அன்னுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு,போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. லாட்டரி விற்பனையை தடுக்க, கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை