உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய திட்டத்தில் காளான் வளர்ப்பு குடில் 

மானிய திட்டத்தில் காளான் வளர்ப்பு குடில் 

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்தில் காளான் வளர்ப்பு குடில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு வட்டாரத்தில், 2023 - 24ம் ஆண்டிற்கான மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காளான் வளர்ப்பு குடில் அமைக்க, 50 சதவீதம் மானியத்தில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.காளான் வளர்ப்பு குடில் மானியம் பெற விவசாயிகள், https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற வெப்சைட்டில் தங்களது பெயர், முகவரி, ஆதார் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.அல்லது கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தில் நேரில் வந்து விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை