உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்துமாரியம்மன் கோவில் 41ம் ஆண்டு திருவிழா துவக்கம்

முத்துமாரியம்மன் கோவில் 41ம் ஆண்டு திருவிழா துவக்கம்

போத்தனுார்; சுந்தராபுரம் முத்துமாரியம்மன் கோவிலின், 41ம் ஆண்டு திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 29ம் தேதி இரவு கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், கம்பம் போடுதல் நடக்கின்றன.வரும், 30 மற்றும் மே, 1ம் தேதிகளில் இரவு, 7:00 மணிக்கு மகா தீபாராதனை, 2ம் தேதி மாலை திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம், 3ல் மகா ஆராதனை, 4ல் திருவாசகம் முற்றோதல், 5ல் மகா தீபாராதனை, 6ம் தேதி இரவு அம்மன் திருக்கல்யாணம் ஆகியவை நடக்கின்றன.7ம் தேதி காலை குறிச்சி பொங்காளியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரக ஊர்வலம் துவங்கி, மதியம் கோவிலை சென்றடைகிறது. தொடர்ந்து அம்மனுக்கு அக்னி அபிஷேகம், அன்னதானம், மாலை பொங்கல், மாவிளக்கு வழிபாடும், 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் அம்மன் வீதி உலாவும் நடக்கின்றன. 9ம் தேதி காலை மகா அபிஷேகம் தொடர்ந்து, அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !