முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா
பொள்ளாச்சி: சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின், 117 வது பிறந்த நாள் விழா பொள்ளாச்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இளைஞர் நலச்சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.அதன்படி, தேர்நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கதேவர் படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார்.அ.தி.மு.க., நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் அருணாச்சலம், இரும்புகுரு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.