மேலும் செய்திகள்
பசும்பொன் வருவார் மோடி: பா.ஜ., தகவல்
26-Oct-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வட்டார தேவர் சமூக அறக்கட்டளை மற்றும் இளைஞர் பேரவை சார்பில் முத்துராமலிங்க தேவரின், 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குரு பூஜை தேர்நிலையத்தில் நடந்தது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து, முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தேசியமும், தெய்வீகமும் முத்துராமலிங்க தேவரின் நிலைத்த பெருமைக்கும், புகழுக்கும் காரணம் என தெரிவித்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் மாரிமுத்து, அருணாச்சலம், கனகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
26-Oct-2025