உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குட்டீஸூக்கு கணக்கு துவக்கினால் என் முதல் சேமிப்பு சான்றிதழ்

குட்டீஸூக்கு கணக்கு துவக்கினால் என் முதல் சேமிப்பு சான்றிதழ்

குழந்தைகளின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கினால், 'என் முதல் சேமிப்பு' என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு துவக்கப்படும் கணக்குகளுக்கு என் முதல் சேமிப்பு என்ற சான்றிதழ் வழங்கி தபால்துறை ஊக்கப்படுத்தப்படுகிறது.பெற்றோர் தங்கள் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கி துவங்கி பயன் பெறலாம். தபால் அலுவலகத்தில், 7.5 சதவீத வட்டியுடன் பெண்களுக்கான பிரத்யேகமான தபால் கணக்கு, 7.1 சதவீத வட்டியுடன் பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான தபால் கணக்கு துவங்கலாம்.மேலும் விபரங்களுக்கு, தங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விபரங்களை www.indiapost.gov.inஎன்ற இணையதள முகவரியில் அறியலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !