சிறுமுகையில் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள்
மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சி 7 வது வார்டுக்குட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில், சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலவம் பஞ்சு மற்றும் மாமரம் உள்ளது. இந்த மரங்கள் பழத்தோட்டம் பகுதியின் அடையாளம் என அப்பகுதி மக்களால் அன்பாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த மரங்களை இரவோடு இரவாக வெட்டி சாய்த்தனர்.மரம் வெட்டும் தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, மக்களை பார்த்த மர்ம நபர்கள் வெட்டிய மரத்தை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மரம் வெட்டிய நபர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.---