வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த நாட்டில் எவரும் விமரிசனங்களுக்கு விலக்களிக்கப்பட்டோரில்லை
கோவை : ஈ.வெ.ரா., மற்றும் பேச்சாளர் மதிவதனி குறித்து விமர்சனம் செய்ததாக, வரலாற்று ஆய்வாளர் சாரங்கபாணியை, போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி மணத்திகுப்பத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி, 65. காரைக்குடி அழகப்பா பல்கலை, அண்ணாமலை பல்கலை, தமிழ் பல்கலை ஆகிய கல்வி நிறுவனங்களில் தமிழ் பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தவர். நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்.இவர், 'யூ டியூப்' சேனலுக்கு அளித்த பேட்டியில், பெ.தி.க., மாநில துணைப் பொதுச்செயலர் மதிவதனி மற்றும் ஈ.வெ.ரா., கொள்கைகள் குறித்து, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.பெ.தி.க., கோவை மாவட்ட செயலர் பிரபாகரன், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் கொடுத்த புகாரில், 'ஈ.வெ.ரா., கொள்கைகள் குறித்தும், பேச்சாளர் மதிவதனி குறித்தும் தவறான விமர்சனங்களை வெளியிட்டுள்ள வரலாற்று ஆய்வாளரான, கடலுாரை சேர்ந்த சாரங்கபாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், சாரங்கபாணியை ஓசூரில் கைது செய்தனர். அவரை, கோவை அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.
இந்த நாட்டில் எவரும் விமரிசனங்களுக்கு விலக்களிக்கப்பட்டோரில்லை