உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ்.கல்லுாரியில் நாசா ஸ்பேஸ் சேலஞ்ச்

எஸ்.என்.எஸ்.கல்லுாரியில் நாசா ஸ்பேஸ் சேலஞ்ச்

கோவை;எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லுாரியில், 'நாசா ஸ்பேஸ் ஆப் சேலஞ்ச் 2025' எனும் ேஹக்கத்தான் நடந்தது. திருவனந்தபுரம் யு.டபிள்.யு.ஆர்.ஏ.எம்., கல்வி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில், நாசா வழங்கும் திறந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், ஹேக்கத்தான் நடந்தது. ஜே.எஸ். ஆட்டோ காஸ்ட் பவுண்ட்ரி இந்தியா லிமிடெட் நிதி அலுவலர் மதன் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, அரபு நாடுகள் என, உலகம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து, பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த ஹேக்கத்தான், படைப்பாற்றல், குழுப்பணி, மற்றும் பிரச்னை தீர்க்கும் திறன்களை வளர்க்கவும்,பூமியியல், விண்வெளி தொழில்நுட்பம், நிலைத்தன்மை போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை உருவாக்கவும், மாணவர்களை ஊக்குவித்ததாக, கல்லுாரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி