உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவை கூடைப்பந்து கழக அணி வெற்றி

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவை கூடைப்பந்து கழக அணி வெற்றி

கோவை : கோவை மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள், பெண்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது; ஜூன், 1ம் தேதி நிறைவடைகிறது.'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடக்கிறது. ஆண்களுக்கான போட்டியில், பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணியும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியும் மோதின. இதில், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி, 90-74 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.இரண்டாம் போட்டியில், இந்திய கப்பல் படை அணியும், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் விளையாடியது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, 76-67 என்ற புள்ளிகளில் வெற்றிபெற்றது.பெண்களுக்கான போட்டியில் சென்னை வருமான வரி அணியும், திருவனந்தபுரம் கேரளா காவல் துறை அணியும் மோதின. இதில், வருமான வரி அணி, 60-49 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. திருவனந்தபுரம் கேரள மாநில மின் வாரிய அணியும், தென் மேற்கு ரயில்வே அணியும் விளையாடியது. இதில், கேரள மாநில மின் வாரிய அணி, 77-74 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.ரைசிங் ஸ்டார்ஸ் அணியும், கேரள மாநில மின்வாரிய அணியும் மோதியது. இதில், கேரள மின் வாரிய அணி, 75-43 என்ற புள்ளிகளில் வென்றது. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை