மேலும் செய்திகள்
மனம் கவரும் மணல் ஓவியங்கள்: அசத்தும் பூ வியாபாரி
26-Jan-2025
கோவை; தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த ஓவியப்போட்டியில் மாணவ, மாணவியரின் ஓவியங்கள், சிந்திக்க வைக்கும் விதத்தில் இருந்தன.தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு, திறனறி போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கோவை மண்டல அறிவியல் மையத்தில் முதல் நாளான நேற்று, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.'காலநிலை மாற்றம்' எனும் தலைப்பில் நடந்த ஓவியப்போட்டியில், அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர். சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக புவி கண்ணீர் வடித்தல், வறட்சி உள்ளிட்ட புகைப்படங்கள் சிந்திக்க வைக்கும் விதத்தில் இருந்தன.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை போட்டியும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியும் இன்றும், நாளையும் நடக்கிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
26-Jan-2025