மேலும் செய்திகள்
கல்லுாரிகளில் புதிய மாணவர்களுக்கு 'வெல்கம்!'
11-Sep-2024
கோவை : எஸ்.என்.எஸ்., கல்லுாரி, சி.எஸ்.இ., மற்றும் சி.எஸ்.டி., துறை சார்பில், 'ஏ.ஐ., மற்றும் கிளவுட் கம்ப்யூடிங்' குறித்த சர்வதேச அளவிலான பயிலரங்கு கல்லுாரி அரங்கில் நடந்தது.அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எம்பார்ட் டெக்னாலஜிஸ் வல்லுநர் தர்ம தேஜா வலிவர்த்தி பங்கேற்று கிளவுட் கம்ப்யூட்டிங், ஏ.ஐ., மிஷின் லேர்னிங், நெட்வார்க்கிங் அதன் தாக்கம் மற்றும் நன்மைகள், நிஜ உலக பயன்பாடுகள், ஸ்டார்ட் அப் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.இந்நிகழ்வில், 160 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். துவக்கவிழாவில், கல்லுாரி முதல்வர் சார்லஸ், சக பேராசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
11-Sep-2024