தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு
கோவை; பல் தொழில்நுட்பக் கல்லுாரி தேசிய மாணவர் படையினருக்கான 'சி' சான்றிதழ் தேர்வில், ஏராளமான கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.தேசிய மாணவர் படை குழுமத்தின் சார்பில், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், பயிற்சி முறை தேர்வு நடந்தது. இதில் மாவட்டத்தின், 89 கல்லுாரிகளின், 663 மாணவர்கள் பங்கேற்றனர்.படை அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், தகவல் பரிமாற்றம், துாரம் கணக்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு ராணுவப்பாடங்களில், செய்முறைத் தேர்வு நடந்தது.'சி' சான்றிதழ் பெறும் மாணவர்கள், ராணுவ அதிகாரிகளுக்கான தேர்வில் எழுத்து முறை தேர்வை எழுதத் தேவையில்லை. நேரடியாக நான்கு நாட்கள், எஸ்.எஸ்.பி., நேர்முகத் தேர்வில், பங்கேற்று வெற்றி பெறமுடியும். தேர்வுக்கு, கோவை தேசிய மாணவர் படை குழும தலைமை அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார்.