வடமாநிலத்தினர் நவராத்திரி கொண்டாட்டம்
பல்லடம்: பல்லடம் அருகே காரணம்பேட்டையில், வடமாநில குடும்பத்தினர் சார்பில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள கூப்பிடு பிள்ளையார் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள துர்கா தேவி சிலைக்கு, வட மாநில குடும்பத்தினர் தீர்த்த கலசங்கள் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். நவராத்திரியின் ஒன்பது நாட்களும், 9 விதமான தேவியருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.இதையடுத்து, மூடிய நிலையில் உள்ள துர்கா தேவியின் திரை அகற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து சிலை விசர்ஜனம் செய்யப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.