பள்ளி, கோவிலில் நவராத்திரி விழா
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி மாரிமுத்து, செயலர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாணவர்களிடம், தசரா திருவிழாவின் முக்கியத்துவம், பாரம்பரியமாக எவ்வாறு கொண்டாடப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது. * கோட்டூர் மலையாண்டிபட்டணம் ஆதிசங்கரர் அமரநாயகி கோவிலில், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஆயிரம் பொம்மைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கொலுவில், கிருஷ்ண லீலா, சிவனின் திருவிளையாடல்கள், கந்தன் வரலாறு என பல பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாலை, 3:00 முதல் மாலை, 6:00 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.