உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு தேவை

ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு தேவை

மடத்துக்குளம்; மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக, மதுரை, திருநெல்வேலி உட்பட தென்மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பாலத்தில், மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.எனவே, நெடுஞ்சாலைத்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ