உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் டவுன் பஸ் வேண்டும்

கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் டவுன் பஸ் வேண்டும்

கருமத்தம்பட்டி; ''கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும்,'' என, சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கருமத்தம்பட்டி சுற்று வட்டார கிராமங்களின் மையப் பகுதியாகும். அன்னூர் ரோடு, அவிநாசி ரோட்டை சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, கருமத்தம்பட்டி வந்துதான் செல்ல வேண்டும். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கருமத்தம்பட்டியில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். போதுமான பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து சுற்றுவட்டார கிராம மக்கள் கூறுகையில், ''போதிய பஸ்கள் இல்லாததால், வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லுாரிக்கு செல்வோரும் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. அதனால், காலை மற்றும் மாலை வேளைகளில் கருமத்தம்பட்டி வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை