உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர் பாதுகாப்பில் வேம்பு ; விவசாயிகள் அறிவுரை

பயிர் பாதுகாப்பில் வேம்பு ; விவசாயிகள் அறிவுரை

பெ.நா.பாளையம் : பயிர் பாதுகாப்பில் வேம்பின் அவசியம் குறித்து முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறியுள்ளனர்.பயிர் சாகுபடியில் ரசாயன மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதால், சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது. ரசாயன மருந்துகளுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி, விவசாயிகள் பயன் பெறலாம். இயற்கையில் கிடைக்கும் பொருள்களில் பிரதானமானது வேம்பு. வேம்பின் கசப்பும், மனமும் எதிரி இனங்களை சாப்பிட விடாமலும், பயிரை அண்ட விடாமலும் விரட்டுகின்றன. பயிர்களை தாக்கும் பூச்சி இனங்கள் வளர்ச்சி குன்றுதல், முட்டையிடுவது முதல் அந்து பூச்சியாவது வரை பாதிக்கிறது. புகையான் பூச்சிகளின் ஹார்மோன் பாதிக்கப்பட்டு, உடல் கூறு அமைப்புகளின் நடைமுறை பணிகள் பாதிக்கின்றன.வேப்பம் புண்ணாக்கு பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு எக்டருக்கு, 250 கிலோ வரை நிலத்தில் வேப்பம் புண்ணாக்கு இடுவதால், நிலத்தின் வெப்பம், அமில, காரத் தன்மைகள், மண்ணில் பிராணவாயு அளவு, புழுக்களின் வளர்ச்சிக்கு பாதகமாகவும், அதேசமயம் பயிர் வளர்ச்சிக்கு சாதகமாகவும் மாறுகிறது. செடியின் வேர் பாகத்துக்கு அருகில், 23 அங்குல ஆழத்தில் மண்ணுடன் கலக்க வேண்டும். இம்முறையை பயன்படுத்தி, விவசாயிகள் ரசாயன மருந்துகளின் பயன்பாட்டை குறைத்து, நல்ல பலன் பெறலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை