உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போஸ்ட் ஆபீசில் நெட் ஒர்க் பிரச்னை

போஸ்ட் ஆபீசில் நெட் ஒர்க் பிரச்னை

வால்பாறை:வால்பாறை போஸ்ட் ஆபீசில் 'நெட் ஒர்க்' பிரச்னையால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்தனர். வால்பாறை நகரில் உள்ள, போஸ்ட் ஆபீசில் தினமும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இன்சூரன்ஸ், டெபாசிட், பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்துகின்றனர். இது தவிர, விரைவு தபால், பதிவு தபால்கள் அனுப்புகின்றனர். இந்நிலையில், 'நெட் ஒர்க்' பிரச்சனையால் நேற்று காலை முதல் போஸ்ட் ஆபீசில் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமலும், சேமிப்பு கணக்கில் பணம் செலுத்த முடியாமலும் பாதித்தனர். போஸ்ட் ஆபீஸ் ஊழியர்களிடம் கேட்ட போது, 'இணைய தளத்தில் விரைவாக பணிபுரியும் வகையில் புதிய 'சாப்ட்வேர்' பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், புதிய 'சாப்ட்வேர்' என்பதால், சரியான முறையில் இயங்காததால், 'நெட் ஒர்க்' பிரச்னை ஏற்பட்டு, பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரைவில் சரி செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் சேவைகள் வழங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை