உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை; அகில இந்திய கல்வி ஆலோசகர்கள் மற்றும் வழிகாட்டிகள் சங்கத்தின், 2025-27 ம் ஆண்டுக்கான புதிய தேசிய மற்றும் மாநில தலைமை நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டனர். கடந்த, பிப்., மாதம் தேசிய அளவில் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய அணியின் தேசிய தலைவராக சாம் பிலிப் தேர்வு செய்யப்பட்டார். தேசிய செயலாளராக கலீல் ஷா, தேசிய பொறுப்பாளராக ரோபின் புலிமூட்டில் ராஜு, தேசிய துணைத்தலைவர்களாக கோபு, மற்றும் பிரதேஷ் கோகுலம், இணை செயலாளர்களாக ஷாஜஹான் மற்றும் கிருஷ்ண பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில், கேரள மாநில தலைவராக சித்திக் பாரம்பில் செயலாளராக தவான், பொருளாளராக பிரிஜிஷ், தமிழகத்தில் மாநில தலைவராக சனீஷ் புலிஞ்சோட்டில்,செயலாளராக ஷிபின், பொருளாளராக பிள்ளை , கர்நாடகா கிளை தலைவராக அகில் ஜார்ஜ், செயலாளராக சாஜோ சன்னி, பொருளாளராக ராய், தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திரன் மற்றும் தோமஸ் ஜார்ஜ் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.மேலும், 24 புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேசிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டி வாழ்த்துக்களை சக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை