உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்

சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்

அன்னுார்; பொதுமக்கள் பங்களிப்பில் 6 லட்சம் ரூபாயில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அன்னுாரில், அ.மு.காலனியில், துணை சுகாதார நிலையம் வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. போதுமான இட வசதியுடன் சொந்த கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், எஸ்.பி.ராமசாமி அறக்கட்டளை உட்பட பொதுமக்கள் பலரது பங்களிப்போடு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 அடிக்கு 16 அடி உள்ள கட்டிடம் மற்றும் முன்புறம் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதன் திறப்பு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் துணை சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார். கவுன்சிலர் காஞ்சனா சிவகுமார் முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வி குழு உறுப்பினர்கள் தனபாலன், எட்ராஜ், நாசர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ