உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் புதிய டீன் கீதாஞ்சலி உறுதி

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் புதிய டீன் கீதாஞ்சலி உறுதி

கோவை : கோவை அரசு மருத்துவமனையின் புதிய டீன் ஆக, டாக்டர் கீதாஞ்சலி பொறுப்பேற்றுக் கொண்டார். இம்மருத்துவமனையின் டீன் ஆக இருந்த டாக்டர் நிர்மலா, கடந்த மாதம் ஓய்வு பெற்றார். ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, கோவை அரசு மருத்துவமனை டீன் ஆக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவராக, ஏற்கனவே பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''மருத்துவ மனையில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். நோயாளிகள், டாக்டர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓரிரு வாரங்கள் மருத்துவமனையின் தேவைகள் குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தேவையானவை நிறைவேற்றப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !