உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சூலூர் தாலுகாவில் புதிய உள் வட்டம் உருவாக்கம்

 சூலூர் தாலுகாவில் புதிய உள் வட்டம் உருவாக்கம்

சூலூர்: சூலூர் தாலுகாவில், புதிதாக இருகூர் உள்வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சூலூர் தாலுகா கடந்த, 2009ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. சூலூர், கருமத்தம்பட்டி, செலக்கரச்சல், வாரப்பட்டி உள்ளிட்ட நான்கு உள்வட்டங்கள், 41 வருவாய் கிராமங்கள் உள்ளன. 585.06 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. வருவாய் கிராமங்களில் வேகமாக அதிகரித்து வந்த மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, புதிதாக வருவாய் உள்வட்டங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் புதிதாக, ஐந்து உள் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சங்கனூர் உள்வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சங்கனூர் கிழக்கு, மேற்கு என உருவாக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் உள்வட்டம் பிரிக்கப்பட்டு, சிறுமுகையும், சிக்தாசம்பாளையத்தை இரண்டாக பிரித்து, டவுன், ரூரல் என, பிரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சூலூர் தாலுகாவில் உள்ள, சூலூர் உள்வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, இருகூர் உள்வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இருகூர் உள்வட்டத்தின் கீழ், ஒட்டர்பாளையம், இருகூர், பட்டணம், பீடம் பள்ளி உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருகூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் துவக்கப்பட்டு, வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !