உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய நீதிபதி பொறுப்பேற்பு

புதிய நீதிபதி பொறுப்பேற்பு

கோவை: சி.ஜே.எம்., கோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட புதிய நீதிபதி, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பணியிடம், பல மாதங்களாக காலியாக இருந்தது. இக்கோர்ட்டிற்கு, கோவை முதன்மை சார்பு நீதிபதி நம்பிராஜன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சி.ராஜலிங்கம், கோவை, சி.ஜே.எம்., கோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ