உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ணா கல்லுாரிக்கு புதிய லோகோ அறிமுகம்

ராமகிருஷ்ணா கல்லுாரிக்கு புதிய லோகோ அறிமுகம்

கோவை : நவ இந்தியா, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது. கல்வி, ஆராய்ச்சி மேம்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முதலிடம் பிடித்த எம்.பி.ஏ., துறை உதவி பேராசிரியர் திவ்யா, இரண்டாமிடம் பிடித்த கணினி அறிவியல் துறை தலைவர் மரிய பிரசில்லா, மூன்றாமிடம் பிடித்த பி.காம்., புரபஷனல் அக்கவுண்டிங் துறை தலைவர் சந்தானகிருஷ்ணன் ஆகியோருக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதேபோல், முதல் மூன்று இடங்களை பிடித்த துறைகள், முறையே பன்னாட்டு வணிகவியல் துறை, எம்.பி.ஏ., துறை மற்றும் பி.காம்., சி.ஏ., கணினி அறிவியல் துறைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. விழாவில், கல்லுாரிக்கு புதிய 'லோகோ' அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லோகோவுடன் கூடிய அடையாள அட்டைகளை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், பேராசிரியர்களுக்கு வழங்கினார். தேசிய தரவரிசைப் பட்டியலில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, அகில இந்திய அளவில் 76வது இடத்தைபெற்றதற்கு வாழ்த்து தெரிவி க்கப்பட்டது. சென்னை வி.ஐ.டி., பல்கலை கூடுதல் பதிவாளர் மனோகரன், ஸ்ரீசிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி