உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய மென்பொருள் பயன்பாடு குறைகிறது காத்திருப்பு நேரம்

புதிய மென்பொருள் பயன்பாடு குறைகிறது காத்திருப்பு நேரம்

கோவை; கோவை தலைமை தபால் நிலையத்தில், புதிய மென்பொருள் பயன்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவு சேவையில், பொதுமக்களின் காத்திருப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழக தபால் துறையில், திருச்சி மண்டலத்தில், கரூர் கோட்டம் குளித்தலை, மேற்கு மண்டலத்தில் கோவை கோட்டம் கோவை, சென்னை மண்டலத்தில் வேலுார் கோட்டம் வேலுார், மதுரை மண்டலத்தில் கன்னியாகுமரி கோட்டம் தக்கலை ஆகிய தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள துணை, கிளை அஞ்சலகங்களில், ஏ.பி.டி., 2.0 (Advanced Postal Technology) பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை கூட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 46 துணை மற்றும் 50 கிளை தபால் நிலையங்களில் மென்பொருள் பயன்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவு சேவை வழங்கப்பட்டு, பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைந்து வருகிறது. இதுகுறித்து, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறுகையில், ''புதிய மென்பொருள் பயன்பாடு அமல்படுத்தப்பட்டு மூன்று நாட்களாகின்றன. பொதுமக்கள் விரைவாக சேவை பெற்று வருகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ