உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதுகெலும்பு சிகிச்சைக்கு புது கருவி அறிமுகம்

முதுகெலும்பு சிகிச்சைக்கு புது கருவி அறிமுகம்

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் துல்லியமாக 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய, முதுகெலும்பு டி-கம்பரஷன் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. இதை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் துவக்கி வைத்தார். இது, சென்சார் மூலம் துல்லியமான ஒரு மல்டிபங்க்ஷனல் கணினி உதவியுடன் கூடிய சாதனம். நாள்பட்ட கழுத்து, முதுகுவலி அல்லது முதுகெலும்பு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பல நன்மைகளை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை துல்லியமாக குறிவைத்து, முதுகெலும்பு வட்டுகளில் அழுத்தத்தை குறைத்து, இயற்கையான குணப்படுத்துதலை ஊக்குவிப்பதாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராஜகோபால் தெரிவித்தார், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் ஆகியோர், நிகழ்வில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை