என்.ஜி.எம்., கல்லுாரிக்கு உயரிய அங்கீகாரம்
பொள்ளாச்சி; தேசிய தர மதிப்பீட்டு குழு வாயிலாக, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி, 3.51 புள்ளிகளுடன் 'A++' என்னும் உயரிய அங்கீகாரம் பெற்றுள்ளது. அதன்பேரில், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.கல்லுாரித் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். மாணவர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மாணிக்கச்செழியன், 'A++' அங்கீகாரம் பெற செய்த பணிகள் குறித்து பேசினார்.கோவை வேதநாயகம் மருத்துவமனை தலைவர் கந்தசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம், கோவை எரோபேஸ் நிறுவன தலைவர் பழனிசாமி, முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர்கள் அதிபதி, மகாலிங்கம் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். துறைத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.