உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கபடி போட்டியில் வென்ற என்.ஜி.எம். கல்லுாரி அணி

கபடி போட்டியில் வென்ற என்.ஜி.எம். கல்லுாரி அணி

பொள்ளாச்சி:பாரதியார் பல்கலை கல்லுாரி அணிகள் இடையிலான கபடி போட்டியில், பொள்ளாச்சி என்.ஜி.எம். அணி வெற்றி பெற்றது. முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டி, கோவை கற்பகம் பல்கலையில் நடந்தது. போட்டியானது, 'லீக்' சுற்று முறையில் நடத்தப்பட்டது. போட்டியில், என்.ஜி.எம்., கல்லுாரி அணியும் பங்கேற்றது. அரையிறுதி போட்டியில், என்.ஜி.எம்., அணி, குமரகுரு அணியை 35 --26 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இதையடுத்து, இறுதி போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணியை எதிர்கொண்டது. அதில், 34--30 என்ற புள்ளிக் கணக்கில் என்.ஜி.எம்., கல்லுாரி அணி வெற்றி பெற்றது. இதேபோல, பாரதியார் பல்கலை கல்லுாரி அணிகள் இடையிலான மாணவியர் கபடி போட்டி, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில் நடந்தது. போட்டியானது, 'நாக்அவுட்' முறையில் நடத்தப்பட்ட நிலையில், என்.ஜி.எம்., அணி, அரையிறுதி போட்டியில், எஸ்.டி.சி. அணியை எதிர்கொண்டது. அதில், 53-24 என்ற புள்ளிக் கணக்கில் என்.ஜி.எம்., அணி வென்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணியுடன் மோதி, 58--35 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, கோப்பையை கைப்பற்றியது. அணி வீரர்களை, கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், கல்லுாரி நிர்வாக மேலாளர் ரகுநாதன், கல்வி இயக்குனர் சரவணபாபு, ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை