உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.ஜி.பி. கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

என்.ஜி.பி. கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கோவை: என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த, 25வது பட்டமளிப்பு விழாவில், 1992 பேர் பட்டம் பெற்றனர். என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார் பட்டம் வழங்கி பேசுகையில், ''மாணவர்கள் படித்து முடித்து பெறும் பட்டமானது, சமூக மதிப்பீட்டை உருவாக்கும் செயலி, பேரிடத்தில் அமர வைக்கும். பட்டம் மாணவர்களின் ஆளுமையின் அடையாளம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி மெருகேற்றுவது என்பதை, கல்வி நிறுவனம் தான் அடையாளப்படுத்தும்,'' என்றார். இளங்கலை மற்றும் முதுகலையை சேர்ந்த, 1992 பேர் பட்டம் பெற்றனர். கல்லுாரி செயலாளர் தவமணிதேவி, என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் அறங்காவலர்கள் அருண், மதுரா, என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை முதன்மை செயல் அதிகாரி புவனேஷ்வரன், முதன்மை செயல் இயக்குனர் நடேசன், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை