உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு, கடைகளை சேதப்படுத்திய யானைகளால் இரவில் தவிப்பு

வீடு, கடைகளை சேதப்படுத்திய யானைகளால் இரவில் தவிப்பு

வால்பாறை; இரு வேறு இடங்களில் வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் திணறினர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, புதுத்தோட்டம், சவராங்காடு, சின்கோனா(டான்டீ) உபாசி, பெரியகல்லார், மாணிக்கா, கவர்க்கல் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால், இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதிகளில் தனியாக நடந்து செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், சின்கோனா(டான்டீ) உபாசி தேயிலை காட்டில் முகாமிட்ட யானைகள் நேற்று முன் தினம் இரவு, 8:00 மணிக்கு, உபாசி அலுவலகத்தில் பணிபுரியும் அனுசாபாபு என்பவரின் வீட்டை இடித்து, உள்ளே நுழைந்து வீட்டில்உள்ள பொருட்களை சேதப்படுத்தின. ஊருக்கு சென்று விட்டு,இரவு, 9:00 மணிக்கு வீடு திரும்பிய அவர்கள், யானை வீட்டை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதே போல், கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் இரண்டாவது நாளாக முகாமிட்ட யானைகள், அங்குள்ள கார்வல்மார்ஸ் சிலை அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தின.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தொழிலாளர்கள், நீண்ட நேரத்திற்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகளால் ஏற்பட்ட சேதங்களை வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டு, வீடு, கடைகளை சேதப்படுத்தி வருவதால், தடுக்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ