உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலைக்கு காரில் செல்ல அனுமதியில்லை

மருதமலைக்கு காரில் செல்ல அனுமதியில்லை

கோவை; மருதமலைக்கோவிலுக்கு நாளை முதல் 14ம் தேதி வரை, பக்தர்கள் வாகனங்களில் வரவேண்டாம் என்று, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவில் செயல் அலுவலரும், துணை கமிஷன ருமான செந்தில் குமார் கூறியதாவது: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், நாளை முதல், 14 வரை பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு, இத்திருக்கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவர். இதை கருத்திற்கொண்டு, மேற்படி நாட்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் வர பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள் வாயிலாகவும், மலைப்படிகள் வழியாகவும், திருக்கோவில் பஸ் மூலமும் வரலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ