உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கால்நடைகளுக்கு இயர் டேக் பொருத்த ஆர்வமில்லை

 கால்நடைகளுக்கு இயர் டேக் பொருத்த ஆர்வமில்லை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டத்தில் கால்நடைகளில் காதுகளில் அடையாள வில்லை பொருத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை என, கால் நடைத்துறையினர் தெரிவித்தனர். கோமாரி மற்றும் பிற நோய்த் தடுப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, குறிப்பாக, நான்கு மாதங்கள் முதல் சினை, கறவை மாடுகள், எருமை, காளைகளுக்கு அடையாள வில்லை (இயர் டேக்) பொருத்தப்படுகின்றன. அவை, கால்நடை வளர்ச்சி, நோய் கண்காணிப்பு, அரசு மானிய உதவிகள் போன்றவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன. இந்த அடையாள வில்லைகள் கால்நடைப் பராமரிப்பு மற்றும் தடுப்பூசி முகாமின்போது, கால்நடைத்துறையினர் வாயிலாக இலவசமாகப் பொருத்தப்படுகின்றன. ஆனால், பொள்ளாச்சி கோட்டத்தில், இத்தகைய அடையாள வில்லை பொருத்த கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, அடையாள வில்லைகளை கைகளில் வாங்கிச் செல்லவே முற்படுகின்றனர். கால்நடைத்துறையினர் கூறியதாவது: அடையாள வில்லையில், 12 இலக்க எண் இருக்கும். அந்த இலக்கத்தின் வாயிலாக கால்நடைகளின் வயது, பாலினம், ஆரோக்கிய நிலை போன்ற விபரங்கள், பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது. கால்நடை விற்பனை, இறப்பு உள்ளிட்டவைகளின் போது, அந்த 'வில்லை' வாயிலாக கால்நடைகளின் முழு விபரத்தை அறிந்து கொள்ளலாம். ஆனால், கால்நடை காதுகளில் அடையாள வில்லை பொருத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. வில்லை பொருத்தப்பட்டால் மேய்ச்சலின் போது, கம்பிகள், மரக்குச்சிகளால் காயம் ஏற்படும் என்பதால், அதனை தவிர்க்க முற்படுகின்றனர். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை